பொதுமக்களின் கருத்துக்களை பெற்றுக்கொள்ளும் நடைமுறை நல்லாட்சியின் வெற்றி

221 0

தேசிய கொள்கை ஒன்றை வகுப்பதற்காக பொதுமக்களின் கருத்துக்களை பெற்றுக்கொள்ளும் நடைமுறை நல்லாட்சியின் வெற்றியாகும் என்று பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

அதேபோன்று பாராளுமன்ற விடயங்களை முன்னெடுக்கும் பொழுதும் பொதுமக்களின் கருத்துக்களையும் ஒத்துழைப்புகளையும் பெற்றுக்கொள்வது ஒரு முன்னேற்றகரமன செயற்பாடு என்று பாராளுமன்ற உறுப்பினர் கூறினார்.

2019 வரவு செலவுத் திட்ட யோசனைகள் குறித்து பொதுமக்களின் கருத்துக்களை ஆராயும் விசேட செயற்பாடு நேற்று காலை கண்டி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

அந்த செயலக கூட்டத்தில் COPE எனப்படும் நிதிசார் நடவடிக்கைகளை கண்காணிக்கும் பாராளுமன்ற குழுத்தலைவர் என்ற வகையில் கலந்து கொண்டார்.

வரவு செலவுத் திட்ட அறிக்கையை தயாரிப்பதற்காக முதன்முறையாக பொதுமக்களின் கருத்துக்களை பெற்றுக்கொள்கின்றமை சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விடயம் என்று இந்நிகழ்வில் கலந்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் மாரசிங்க தெரிவித்தார்.

இதனை ஜனநாயகத்தின் ஒரு பண்பாக கருத முடியும். அத்துடன் COPE பாராளுமன்ற தெரிவுக்குழு பொதுமக்களுக்கு பொறுப்பு கூற வேண்டிய ஒரு குழுவாகும். பொதுமக்களின் வரிப்பணம் நாட்டின் அபிவிருத்திக்கு சரியான முறையில் பயன்படுத்துவதை உறுதிப்படுத்துவதற்காகவே இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது என்று மாரசிங்க மேலும் தெரிவித்தார்.

Leave a comment