முன்னர் அரசாங்கம் தருவதை ஏற்று எங்கள் இடங்களை நாங்கள் அபிவிருத்தி செய்ய வேண்டும் என்று சில தமிழ்க் கட்சித் தலைவர்கள் கூறிய போது அதனை எதிர்த்தவர்கள் எமது கட்சியினர் தான். அவர்களைத் துரோகிகள் என்று அழைத்தவர்களும் அவர்கள் தான்.
அந்தத் துரோகிகளுடன் தான் இப்போது எமது கட்சியினர் உள்ளூராட்சி சபைகள் பலவற்றில் கூட்டு வைத்துள்ளனர் என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
என்னைப் பொறுத்த வரையில் கட்சி அரசியல் ஒரு பொருட்டல்ல. எவ்வளவு வேகமாக ஒரு அரசியல் தீர்வைப் பெற்றுத் தரமுடியும் என்பதே எனது கரிசனை.
நாங்கள் யாவரும் ஒன்றிணைந்து இராணுவத்தினருடன் சேர்ந்த தெற்கத்தையப் பெரும்பான்மையினரின் செயலணி ஒரு அரசியல் செயற்பாடே என்று கூறி எமக்கு அரசியல் தீர்வே தற்போது முக்கியமென்ற கருத்தை முன்வைத்திருந்தால் தமிழ் மக்களின் அரசியல் பலமற்ற நிலையும் தமிழ் மக்களின் உரித்துக்களை வழங்க அரசாங்கம் பின்னிற்கும் பாங்கும் வெளிக் கொண்டு வரப்பட்டிருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.