அம்பாறை, திருக்கோவில் பிரதேசத்தில் கடலரிப்பை தடுக்க மணல் வேலி

471 0

அம்பாறை, திருக்கோவில் பிரதேசத்தில் ஏற்பட்ட கடலரிப்பு காரணமாக ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்திற்கு முன்னாள் உள்ள கொங்கிறீட் வீதிகள் பாரிய சேதத்துக்குள்ளாகியது.

இதனையடுத்து திருக்கோவில் பிரதேச செயலாளரின் ஆலோசனைகளுக்கு அமைவாக திருக்கோவில் பிரதேச தவிசாளர் இ.வி.கமலராஜின் தலைமையில் கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவளத் திணைக்களத்தின் ஒத்துழைப்புடன் அதன் மாவட்ட இணைப்பாளர் எம்.ஜ.எம்.ஜெசூரின் நேரடி கண்காணிப்பின் ஊடாக திருக்கோவில் பிரதேசசபை இயந்திரங்கள் கொண்டு அதன் ஊழியர்கள் மற்றும் பிரதேச இளைஞர் ஆகியோரின் பங்களிப்புடன் அவசர நடவடிக்கையாக மணல் மூடைகளை இடும் பணிகள் நேற்றும் இன்றும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மேலும் இது தொடர்பில் கருத்து தெரிவித்த எம்.ஜ.எம்.ஜெசூர்,

திருக்கோவில் பிரதேசத்தில் தொடர்ந்து இவ்வாறு கடலரிப்புக்குள்ளாகுவதனால் வரலாற்று பழைமை மிக்க முருகன் ஆலயத்தினை பாதுகாக்கும் வகையில் வேறு பிரதேசங்களுக்கு பாதிப்புக்கள் எற்படாதவாறு எமது திணைக்களத்தின் உயர் அதிகாரிகளுடன் கலந்தரையாடி விரைவாக ஒரு நிரந்தர தீர்வு ஒன்றினைப் பெற்றுக் கொடுப்பதற்கு தீர்மானித்தள்ளதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment