சமகாலத்தில் சகல தரப்பினரும் அரசியல்வாதிகள் மீதுள்ள நம்பிக்கையை இழந்துள்ளதாக பேராயர் மெல்கம் காதினல் ரஞ்ஜித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
பௌத்த கலாசார மத்திய நிலையத்தில் நேற்று (02) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் கூறியுள்ளார்.
ஒரு அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் முன்னைய அரசாங்கம் செய்த பணிகள் அத்தனையையும் முன்னுக்குப் பின் மாற்றுகின்றார்கள். இது இன்று நேற்று ஏற்பட்ட ஒன்று அல்ல. மாறாக கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக இதுதான் நடைபெற்று வருகின்றது.
ஒரு குழு ஆட்சிக்கு வந்தவுடன் அவர்கள் தான் காணாமல் ஆக்கினார்கள் என குற்றம்சாட்டுகின்றனர். அதேபோன்று இவர்கள் ஆட்சிக்கு வந்தவுடனும் கூற ஆரம்பிக்கின்றனர். இந்த நிலை நின்று விடுவதில்லை. மாறாக தொடர்கின்றது.
எமது நாடு வெளிநாட்டவரின் ஆக்கிரமிப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, சுயாதீனமான முறையில் எமது பொருளாதார கொள்கையின் கீழ் செயற்படும் நிலை உருவாக வேண்டும். ஒவ்வொரு மனிதனுடையவும் கௌரவத்தைப் பாதுகாத்து, எமது எதிர்கால சந்ததிக்கு அழகான தேசம் ஒன்றை பெற்றுக் கொடுக்கக் கூடிய முறைமையொன்று தேவை.
இந்தப் பணியை நிறைவேற்றுவார்கள் என்று இன்று எம்முடன் உள்ள எந்தவொரு அரசியல் வாதியின் மீதும் நம்பிக்கை வைக்க முடியுமான நிலை இல்லையெனவும் காதினல் மேலும் குறிப்பிட்டுள்ளார்.