எதிர்வரும் 23 ஆம் திகதி பெருந்தோட்ட கம்பனிகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டமொன்றை தொழிலாளர் தேசிய சங்கம் முன்னெடுக்க போவதாக சங்கத்தின் தவைரும் மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு, சமுதாய அபிவிருத்தி அமைச்சருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.
அட்டன் டி.கே.டபிள்யூ. கலாசார மண்டபத்தில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தோட்ட தலைவர் மற்றும் தலைவிகளுக்கு கூட்டு ஒப்பந்தம் தொடர்பில் விளக்கமளிக்கும் நிகழ்வில் இன்று கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
இதன்போது அமைச்சர் அங்கு மேலும் உரையாற்றிய அவர்,
தொழிலாளர்களின் உழைப்பினால் தோட்ட நிர்வாகிகள் மாதாந்தம் ஒரு இலட்சம் ரூபா வரை சம்பளம் பெறுகின்றனர். இந்த நிலையில் தொழிலாளர்களுக்கு சம்பளத்தை இவர்கள் உயர்த்தி கொடுப்பதற்கு ஏன முடியாது.
ஆகவே இம்முறை கூட்டு ஒப்பந்தத்தின் ஊடாக தொழிலாளர்களை ஏமாற்ற முடியாது. நியாயமான சம்பளத்தை வழங்க வேண்டும் என்பதற்கு அழுத்தம் கொடுத்து கம்பனிகளுக்கு எதிராக தலவாக்கலையில் இந்த போராட்டம் நடத்தப்படவுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
இதில் தொழிலாளர்கள் மீது அக்கறை கொண்டுள்ள அனைவரும் உணர்வு பூர்வமாக கலந்து கொள்ளவேண்டும் எனவும் அமைச்சர் இதன்போது அழைப்பு விடுத்தார்.