ஐ.நா. சிறப்பு நிபுணர் நாளை வரு­கின்றார்!

257 0

ஐக்­கிய நாடுகள் சபையின் வெளி­நாட்டுக் கடன் மற்றும் மனித உரி­மைகள் தொடர்­பான சிறப்பு நிபுணர் ஜூவான் பப்லோ பொகோஸ்­லாவ்ஸ்கி நாளை திங்­கட்­கி­ழமை இலங்கை வரு­கின்றார்.

 

எதிர்­வரும்11 ஆம் திகதி செவ்­வாய்­க்கி­ழமை வரை நாட்டில் தங்­கி­யி­ருக்கும் அவர் ஜனா­தி­பதி மற்றும் பிர­தமர் உள்­ளிட்ட அர­சாங்­கத்தின் பிர­தி­நி­திகள் சிவில் சமூ­கத்­தினர் என பல தரப்­பி­ன­ரையும் சந்­தித்து கலந்­து­ரை­யாட உள்ளார்.

மனித உரி­மைகள் நிலைப்­பாட்­டி­லி­ருந்து இலங்­கையின் பொரு­ளா­தாரம் மற்றும் நாட்டின் கடன் உள்­ளிட்ட விட­யங்­களை முழு­மை­யாக ஆராய்ந்து அதன் அறிக்­கை­யினை எதிர்­வரும் மார்ச் மாதத்தில் ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வையில் சமர்­ப்பிப்­பதே தனது கட­மை­யாக உள்­ள­தாக சிறப்பு நிபுணர் ஜூவான் பப்லோ பொகோஸ்­லாவ்ஸ்கி இலங்கை விஜயம் தொடர்பில் கருத்து தெரி­வித்­துள்ளார்.

போரின் பின்­ன­ரான இலங்­கையின் நிலை­மைகள் குறித்து ஆராய்­வ­தற்­காக பரந்­த­ள­வி­லான சந்­திப்­பு­களை மேற்­கொள்ள சிறப்பு நிபு­ணரின் நிகழ்ச்சி திட்­டத்தில் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளது . அரச தரப்­பி­னர்­க­ளுக்கு அப்பால் சிவில் சமூகம், கல்­வி­யா­ளர்கள் மற்றும் அனைத்­து­லக சமூக பிர­தி­நி­திகள்,பங்­கா­ளர்கள் உள்­ளிட்­ட­வர்­க­ளுடன் தான் கலந்­து­ரை­யா­டல்­களை நடத்­த­வுள்­ள­தா­கவும் அவர் குறிப்­பி­ட­டுள்ளார்.

மேலும் இந்த  விஜ­யத்தின் முடிவில் கொழும்பில் ஊட­க­வி­ய­லா­ளர்­களை  சந்­திக்க உள்ளார். வடக்கு அல்­லது நாட்டின் ஏனைய சில பகு­தி­க­ளுக்­கான விஜயம் தொடர்பில் உறு­திப்­ப­டுத்­தப்­ப­டாத நிலையில் உள்­நாட்டு போரில் மிகவும் மோச­மான முறையில் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் தற்போதைய  முன்னேற்றங்கள் குறித்தும் அவர்  அவதானம் செலுத்த உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment