காவிரி உரிமை காக்கவும், கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படுவதை தடுத்த நிறுத்தவும் தமிழர் கடலான சென்னை மெரீனாவில் ஒன்று கூடல் போராட்ட நிகழ்வு மே பதினேழு இயக்கத்தினால் 18-9-2016 அன்று மாலை நடத்தப்பட்டது.
கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படுவதை வேடிக்கை பார்க்கிற, காவிரி உரிமையை பெற்றுத் தராத இந்திய அரசினை எதிர்த்து முழக்கங்களை தோழர்கள் எழுப்பினர்.
பறை இசை முழங்க போராட்டம் துவங்கி முழக்கங்கள் எழுப்பப்பட்டது.
தங்களுடைய போராட்டம் சாதாரண உழைக்கும் கர்நாடக மக்களுக்கு எதிரானதல்ல என்றும், இந்திய அரசுக்கும், கன்னட இனவெறி அரசுக்கும் எதிரானது என்றும் தெரிவித்தனர்.
”இந்தியா பொய்த்துப் போனது. காங்கிரஸ் அரசு , பாஜக மற்றும் RSS தயவால் கன்னட இனவெறி கும்பலால் திட்டமிடப்பட்டு 600 கோடி தமிழர் சொத்து சேதப்படுத்தப்பட்டது. தமிழர்கள் தாக்கப்பட்டு நிர்வாணப்படுத்தப்பட்டு அவமானப்படுத்தப்பட்டார்கள். இனி இவர்களை நம்பி பயனில்லை. ஒன்றிணைவோம். போராடுவோம்.” என்று பதாகைகளை வைத்திருந்தனர்.
இறுதியில் மே பதினேழு இயக்கத் தோழர் திருமுருகன் காவிரியில் இந்திய அரசின் துரோகம் குறித்தும், தமிழர்கள் தாக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும், தாக்குதல்களின் பின்னணி குறித்தும், தமிழர்கள் அனைவரும் போராட முன்வருகின்றவர்களாக மாற வேண்டும் என்றும் உரையாற்றினார்.
இந்நிகழ்வில் தந்தை பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம், தமிழர் விடியல் கட்சி, விடுதலைத் தமிழ்ப் புலிகள் கட்சி, தமிழர் விடுதலைக் கழகம், தமிழ்த் தேசக் குடியரசு இயக்கம், புரட்சிகர இளைஞர் முன்னணி, கோயம்பேடு கொத்தமல்லி வியாபாரிகள் சங்கம், மக்கள் பாதை, வழக்கறிகர் தோழர் அங்கயற்கண்ணி உள்ளிட்டோரும், பொதுமக்களும், தமிழ் உணர்வாளர்களும் கலந்து கொண்டனர்.
காணொளி பதிவுகள்