அமைச்சர் கபீர் ஹாசீமின் வீடு உடைப்பு

414 0

kabeer-600x307அமைச்சர் கபீர் ஹாசீமின் 120 ஆண்டுகள் பழமையான வீடானது இன்று உடைக்கப்பட்டுள்ளது.

மாவெனெல்ல நகருக்கு அண்மையில் மானெல்ல -ஹெம்மாத்தகம வீதியில் இந்த வீடு அமைந்திருந்ததோடு,குறித்த வீதியியானது கம்பளை நகர் வரை புனரமைப்பு செய்வதன் பொருட்டு அமைச்சரின் வீடு உடைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வீடானது தமது பரம்பரை வீடு என்றும்,தான் இந்த வீட்டிலே பிறந்து வளர்ந்ததாகவும்,தான் பெருந்தெருக்கள் அமைச்சராக இருந்தபோது இந்த வீதியினை அபிவிருத்திக்காக ஒதுக்கியதாகவும் இந்த இடத்திற்கு வருகைத் தந்திருந்த அமைச்சர் கபீர் ஹாசீம் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த காலங்களில் வீதிகளை புனரமைப்பு செய்த போது அரசியல்வாதிகள் தமது வீடுகளை, நிலங்களை பாதுகாப்பதற்காக பல நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும், சிலர் சாதாரண மக்களது இடங்களை உரிமைக் கொண்டாடியதாகவும் தெரிவித்துள்ளார்.

எனவே தான் மக்கள் பிரதிநிதி என்ற வகையில் இந்த விடயத்தில் முன்னோடியாக திகழ வேண்டும் என இவ்வாறான முடிவை எடுத்ததாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்