ஞானசார தேரரின் சுகதுக்கம் விசாரிக்கவுள்ளேன்- துமிந்த

282 0

நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்துக்காக குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டு சிறைத் தண்டனை அனுபவித்து வரும் ஞானசார தேரரின் சுகதுக்கங்களை விசாரிப்பதற்கு அடுத்து வரும் நாட்களில் சிறைச்சாலைக்கு தான் செல்லவுள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் அமைச்சருமான துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஞானசார தேரரின் சுகதுக்கங்களை விசாரிக்கச் செல்வது, தான் ஒரு அமைச்சர் என்ற அடிப்படையில் அல்லவெனவும், ஒரு சிங்கள பௌத்தன் என்ற வகையிலேயே செல்வதாகவும் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

தான் அங்கு செல்லும் தினம், நேரம் என்பன இதுவரை தீர்மானிக்க வில்லையெனவும் குறிப்பிட்டுள்ள அமைச்சர், இதற்கு முன்னரும் சிறைச்சாலைக்கு சென்று அவரை சந்தித்துள்ள எனக்கு மீண்டும் அவரைச் சந்திப்பதில் எந்தத் தடையும் கிடையாது எனவும் தெரிவித்துள்ளார்.

இன்றைய சகோதர மொழி தேசிய நாளிதழ் ஒன்றுக்கு அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார். இதற்கு முன்னரும் தேரரை சிறையில் சந்திக்கச் சென்றபோது, அவரை விடுக்க ஜனாதிபதி ஊடாக உடன் நடவடிக்கை எடுக்கப் போவதாக அமைச்சர் துமிந்த அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment