திண்டுக்கல் திண்டுக்கல்லில் இன்ஜினியர் நவீன்சேகரன், ஜெர்மனி பெண்ணை தமிழ் முறைப்படி திருமணம் செய்தார்.திண்டுக்கல்லை சேர்ந்த ராஜசேகர் மகன் நவீன் சேகரன்,31, இங்கு இளங்கலை பொறியியல் முடித்துவிட்டு ஜெர்மனியில் மேற்படிப்பை தொடர்ந்தார்.
ஜெர்மனியில் ‘கிப்பிட்ஸ்’ என்ற நகரைச் சேர்ந்த பென் கார்டு என்பவர் மகள் தெரசா காபெர்ல்,26, என்பவரை காதலித்தார். அவர் அங்குள்ள பல்கலை ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இருவரும் மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.
நாடு, மொழி, இனம், கலாசாரத்தை தாண்டி காதல் வளர்ந்தது. இருப்பினும் இருவீட்டார் சம்மதத்துடன் தமிழ் கலாசாரப்படி திருமணம் நடந்தது.இது குறித்து மணமகன் கூறியதாவது:
தெரசாவுக்கு தமிழ் மீதும், இந்திய பாரம்பரியத்தின் மீதும் மிகுந்த மரியாதை உண்டு. அவர் விருப்பத்தின் படியே நாங்கள் திண்டுக்கல் வந்து திருமணம் செய்கிறோம், என்றார்