வடக்கு மாகாண சபையின் 130 ஆவது அமர்வு இன்று அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் நடைபெற்றது. இந்த அமர்விலே குறித்த பிரேரணையை வட மாகாண உறுப்பினர் சிவாஜிலிங்கம் முன்வைத்ததையடுத்து இதனை மாகாண சபை உறுப்பினர் குகதாஸ் வழிமொழிந்தார்.
இதனையடுத்து வட மாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா, குறித்த பிரேரணையானது கொள்கை ரீதியாக ஏற்றுக் கொள்ள வேண்டிய ஒன்று. ஆனால் ஐ.நா. சபைக்கு அதனை அனுப்பும்போது முறையான ஆவணமாக மொழிநடையில் மாற்றம் செய்யவேண்டும். எனவே இதற்கு குழு ஒன்றிணை அமைத்து அதற்கேற்ப அனுப்புவதுதான் சிறந்தது என்றார்.
அதனை ஏற்றுக்கொண்ட பிரேரணையை முன்வைத்த எம்.கே.சிவாஜிலிங்கம் அவைத் தலைவர் தலைமையில் ஒரு குழுவினை அமைத்து அதற்கு செயற்படுவதற்கு சம்மதம் தெரிவித்தார்.
இதற்கு அமைவாக மாகாண சபை உறுப்பினர்களான சிவாஜிலிங்கம் , தவராசா, அஸ்மின், சர்வேஸ்வரன், சஜந்தன் ஆகியோரைக் கொண்டு அவைத் தலைவர் தலைமையில் குழு ஒன்று உருவாக்கப்பட்டது. குறித்த குழுவானது இரண்டு ஒரு தினங்களில் கூடி முறைப்படியான தீர்மானத்தை அடுத்த சபை அமர்வின்போது சமர்ப்பிக்கப்படும் என அவைத் தலைவர் இதன்போது மேலும் தெரிவித்தார்.