இரத்தினபுரியில் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம்

214 0

இரத்தினபுரி மாவட்டத்தில் மீண்டும் டெங்கு நோய் அதிகரித்து வருவதாக, சுகாதாரத் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், இதுவரை 1656 டெங்கு நோயாளர்கள் இரத்தினபுரி மாவட்டத்தில் இனங்காணப்பட்டுள்ளதாகவும், அதில் இருவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நிவித்திக்கலை பிரதேச செயலப்பிரிவிலேயே கூடுதலான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன், இதுவரை இங்கு 232 டெங்கு நோயாளர்களும், குருவிட்ட செயலகப்பிரிவில் 159 பேரும், எஹலியகொடயில் 161 பேர், எலபாத்தயில் 159 பேர், இரத்தினபுரி நகரப் பகுதியில் 124 பேரும், இரத்தினபுரி பிரதேச சபைப் பகுதியில் 139 பேருக்கும் டெங்கு நோய் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாடசாலை விடுமுறை முடிவடைந்து மீண்டும் ஆரம்பமாகவுள்ள நிலையில், டெங்கு குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது

Leave a comment