கூட்டு எதிர்க் கட்சியினால் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 5 ஆம் திகதி கொழும்பில் நடாத்த ஏற்பாடாகியுள்ள ஆர்ப்பாட்டத்தைத் தடுப்பதற்கு சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு எந்தவிதத் தேவையும் இல்லையென அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் பின்னர் அரசாங்கம் வீழ்த்தப்படும் என்பது போலியான நாடகம் எனவும், உண்மை என்னவென்றால், இந்த ஆர்ப்பாட்டத்தின் பின்னர் அரசாங்கம் மேலும் சக்திபெறும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த அரசாங்கம் மக்களை அசௌகரியத்துக்குள்ளாக்கும் எந்தவித தீர்மானத்தையும் எடுக்கவில்லையெனவும், இதனால், அரசாங்கத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட எந்தவித நியாயங்களுகம் இல்லையெனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
பல்வேறு காரணங்களுக்காக அதிகமான மக்கள் கொழும்புக்கு வருகை தரும் நாளில், இந்த ஆர்ப்பாட்டத்தை நடாத்துவதனால், பொது மக்கள் சிரமங்களுக்கு உள்ளாக்கப்படுவார்கள் எனவும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.