வாக்காளர் பட்டியல் குறித்து முறைப்பாடு இருந்தால் அறிவிக்கவும்- தேர்தல்கள் ஆணைக்குழு

250 0

சீர்திருத்தம் செய்யப்பட்டு வரும் 2018 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர்ப் பட்டியல் தொடர்பிலான முறைப்பாடுகளை பெற்றுக் கொள்வது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

புதிதாக தயாரிக்கப்பட்டுள்ள பெயர்ப் பட்டியல் மாவட்ட செயலகம், பிரதேச செயலகம், உள்ளுராட்சி சபைகள் மற்றும் கிராம சேவை உத்தியோகத்தர் காரியாலயம் என்பவற்றில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய பட்டியலில் உள்ள பெயர்கள் சரியாக இடம்பெற்றுள்ளதா என்பதனை வாக்காளர்கள் பரீட்சிக்க முடியும்.

பெயர்ப் பட்டியலில் தமது பெயர் இல்லையென்றோ அல்லது அதில் யாருடையவாவது பெயர் விடுபட்டு இருப்பதாகவோ கண்டால், அது குறித்து முறைப்பாடு செய்யுமாறும் ஆணைக்குழு பொது மக்களைக் கேட்டுள்ளது.

Leave a comment