மக்களுக்கு வழங்கிய ஆணையின் படி எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலை புதிய முறைமையின் கீழ் நடாத்த வேண்டும் என்பதே ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடு என அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் தோல்வியடைந்தது தேர்தல் முறைமை தொடர்பான விடயமல்ல எனவும், எல்லைநிர்ணய அறிக்கையே எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
செங்கல்ஓயா செயற்திட்ட கண்காணிப்பு நடவடிக்கையில் நேற்று (26) ஈடுபட்டிருந்த போது ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.