பல்கலைகழகங்களில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வுகாணாமல் பல்கலைகழகங்களில் நடைபெறும் எந்தவொரு நிகழ்வுகளுக்கும் அரசியல்வாதிகள் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
ருஹுனு பல்கலைகழகத்தினால் ஏற்பாடு செய்துள்ள நிகழ்வொன்றிற்கு அரசியல்வாதிகளுக்கு அழைப்பு விடுக்காமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இந்திய உயர்ஸ்தானிகர் காரியாலயத்திற்கு கடிதம் ஒன்றை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றித்தின் ஒருங்கிணைப்பாளர் லஹிரு வீரசேகர தெரிவித்துள்ளார்.
குறித்த கடிதத்தை இன்று வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றித்தின் ஒருங்கிணைப்பாளர் லஹிரு வீரசேகர தெரிவித்துள்ளார்.