17.9.2016 சனிக்கிழமை யேர்மனி டோட்முன்ட் நகரில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. தியாக தீபம் திலீபன் உண்ணா நோன்பைத் தொடங்கி எமது மக்களுக்காக அணு அணுவாக தன்னை உருக்கிய மூன்றாவது நாளான இன்று யேர்மனியில் நடைபெற்ற தமிழர் விளையாட்டு விழாவில் அகவணக்கம் நடைபெற்றது. 29 ஆண்டுகள் கடந்தாலும் புலம்பெயர் தேசத்தில் பிறந்தாலும் தாய் மண் உணர்வோடு நீங்காத நினைவாக தியாகச்சுடர் திலீபன் அவர்களின் திருவுருவப் படத்திற்கு விளையாட்டு வீரர்கள் சுடர் ஏற்றி வணங்கினர்.
பின்பு தாயக விளையாட்டுக்கள் உட் பட அனைத்து விளையாட்டுக்களிலும் ஆர்வத்துடன் வீர வீராங்கணைகள் பங்குபற்றி பதக்கங்களையும் வெற்றிக் கேடயங்களையும் பெற்றுக்கொண்டனர்.