இரண்டு பிரதான கட்சிகள் இணைந்து ஆட்சி நடத்தி வரும் தேசிய அரசாங்கத்தில் எந்த மாற்றங்களும் ஏற்படாது என ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பந்துலால் பண்டாரிகொட தெரிவித்துள்ளார்.
காலியில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கருத்து வௌியிட்டுள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சி தனித்து ஆட்சி அமைக்க வேண்டும் என கட்சியில் உள்ள சில உறுப்பினர்கள் கூறினாலும், அதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க விருப்பமில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தேசிய பிரச்சினைகளுக்கு தீர்வுகாண வேண்டியுள்ளமையால், இரண்டு பிரதான கட்சிகளும் தொடர்ந்தும் இணைந்தே ஆட்சி நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் பிரதமர் இருந்து வருகிறார் எனவும் பந்துலால் பண்டாரிகொட மேலும் சுட்டிக்காட்டினார்.