4 வது நாளாக தொடரும் தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு ஐநா நோக்கிய ஈருருளிப்பயணம் இன்று பிரான்ஸ் நாட்டை சென்றடைந்தது.
தொடர்ந்து Saargemünd நகரபிதாவும் நாடாளுமன்ற உறுப்பினருமானவரின் உதவி முதல்வர்களுடன் அரசியல் சந்திப்பு நடைபெற்றது. இச் சந்திப்பில் தமிழின அழிப்புக்கு நீதி வேண்டும் என ஐந்து அம்ச கோரிக்கைகள் அடங்கிய மனு கையளிக்கப்பட்டது. நகர பிதா மனிதநேய ஈருருளிப் பயணம் மேற்கொண்ட மனித நேய செயற்பாட்டாளர்களுக்கு சிறுண்டிகள் தந்து உபசரித்தார். காவல்துறையினரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இச் சந்திப்பில் பிரான்ஸ் உள்ளூர் ஊடகங்களும் வருகைதந்து , ஐநா நோக்கிய ஈருருளிப்பயணம் தொடர்பாக பதிவுகளை மேற்கொண்டனர். Saargemünd நகரை தொடர்ந்து sarr union நகர முதல்வருடனும் சந்திப்பு நடைபெற்று மனுக்கையளிகப்பட்டது. இங்கும் உள்ளூர் ஊடகம் கலந்துகொண்டு செய்திகளை சேர்த்தது குறிப்பிடத்தக்கது.
நாளைய தினம் 18.09.2016 அன்று 16:00 மணி தொடக்கம் 17:00 மணி வரை ஸ்ராஸ்பூர்க் நகரில் உள்ள Place kleber என்னும் இடத்தில் கவனயீர்ப்பு நிகழ்வு நடைபெறவுள்ளது.
அனைத்து தமிழின ஆர்வலர்களையும் கவனயீர்ப்பு நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.