அம்பாந்தோட்டை துறைமுகம் இராணுவ நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படவில்லை என்று ஜப்பான் நாட்டு பாதுகாப்பு அமைச்சர் குறிப்பிட்டுள்ளமையானது மகிழ்ச்சியளிப்பதாக காணப்படுகின்றது.
இருப்பினும் இவரது விஜயத்தின் பிண்ணிலையில் காணப்படுகின்ற மர்மங்கள் எதிர்காலத்தில் எமக்கு பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் என தேசப்பற்றுள்ள வல்லுனர்களின் இயக்க பேச்சாளர் கலாநிதி நாலக கொடஹேவா தெரிவித்தார்.
இது குறித்து மேலும் தெரிவித்ததாவது,
ஜப்பான் நாட்டு பாதுகாப்பு அமைச்சர் கடந்த தினங்களில் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார். இவரது விஜயம் ஜப்பான் நாட்டினை மாத்திரம் பிரதிநிதித்துவப்படுத்துவதாக காணப்படவில்லை . அவுஸ்ரேலியா, இந்நியா, அமெரிக்கா ஆகிய நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்துவதாகவே காணப்படுகின்றது. இவரது விஜயத்தில் பாரிய திட்டங்கள் மறைந்து காணப்படுகின்றது.
2007ஆம் ஆண்டு இந்நியா, அமெரிக்கா, ஜப்பான் , அவுஸ்ரேலியா, போன்ற நாடுகள் சீனாவிற்கு எதிராக பாதுகாப்பு உடன்படிக்கை ஒன்றினை கூட்டினைந்து கைசாத்திட்டுள்ளது.இந்நிய பெருங்கடலில் ஒரு காலத்தில் சீனா வளமிக்க மற்றும் பலமிக்க இராணுவ பலத்தினையே கொண்ட நாடாக எழுச்சிப் பெறும் என்ற அச்சத்தில் இந்நாடுகள் முன்கூட்டியே இவ்வொப்பந்தத்தினை செய்துக் கொண்டது.
இவ்வொப்பந்தம் செய்துக் கொண்டதற்கு பிறகு இதில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் யாவும் இதுரை காலமும் செயற்படுத்தவில்லை ஆனால் டொலான் ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாகிய பின்னர் இவ்வொப்பந்தம் உயிர் பெறலாயிற்று . உலகின் அடுத்த வல்லரசு நாடாக சீனா வரும் அளவிற்கு இன்று அனைத்து துறைகளிலும் பாரிய முன்னேற்றம் அடைந்து வருகின்றது. இதனை தடுப்பதற்காகவே குறித்த ஒப்பந்தம் மீளாயப்பட்டுள்ளது.
அம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவிற்கு வழங்கப்பட்டதை தொடர்ந்து இந்தியா பாரிய எதிர்ப்புக்களை நல்லாட்சி அரசாங்கத்திற்கு வழங்கியது. இந்நியாவை சமாதானப்படுத்த மத்தள விமான நிலையத்தை வழங்கவுள்ளது.
அதே போன்று திருகோணமலை துறைமுகத்தினை ஜப்பானிற்கு வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. ஜப்பானின் ஊடாக 2007ஆம் ஆண்டு இந்நியா, அவுஸ்ரேலியா, அமெரிக்கா, செய்துக் கொண்ட உடன்படிக்கையினை கொண்டு திருகோணமலை துறைமுகம் கூட்டாட்சி நாடுகளின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும். பாரிய பிரச்சினைகளை தோற்றுவிக்க கூடிய நாடுகளின் மத்தியில் இலங்கை கையகப்படுத்தப்பட்டுள்ளது.
1977ஆம் ஆண்டுக்கு பிறகு இலங்கை பலம் வாய்ந்த தலைவர்களின் நன்மதிப்பினை பெற்ற நாடாக மாற்றமடைந்தது. ஜே. ஆர் ஜெயவர்தன இலங்கை விடயத்தில் அமெரிக்காவிற்கு அதிக முக்கியத்துவம் வழங்கி அக்காலக்கட்டத்தில் இந்நியாவை பகைத்துக் கொண்டார்.
அதன் பின்னர் இனப்பிரச்சினைக்கு தீர்வு என்ற பெயரில் இலங்கை, இந்திய ஒப்பந்தம் கைசாத்திடப்பட்டது. இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் இலங்கையில் 30 வருட காலம் பயங்கரவாத யுத்தம் இடம் பெற்றது இதன் பின்னணியை பிரதமர் ரணில் பின்பற்றி வருகின்றார்.
சீனாவினை எதிர்க்கும் நோக்கில் ஜப்பான் ,அமெரிக்கா, இந்நியா, அவுஸ்ரேலியா ஆகிய நாடுகள் செயற்படும் போது அது இலங்கைக்கும் பாதிப்பினை ஏற்படுத்தும். அரசாங்கம் வருமானம் கிடைக்கப் பெறுகின்றது என்ற விடயத்தினை மாத்திரம் கருத்திற் கொண்டு செயற்படாமல் தூரநோக்க சிந்தனைகளுடன் செயற்பட வேண்டும் என்றார்.