உலகில் சிறந்த ஜனாதிபதியாக மைத்திரி தெரிவாம்

309 0

maithripala-sirisenaஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உலகில் சிறந்த ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகளின் பொருளாதாரம் மற்றும் சமூக பேரவை கடந்த 17ம் திகதி வெளியிட்டுள்ள ஆண்டு அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

தரப்படுத்தலை மேற்கொண்ட சர்வதேச சிவில் சேவைகள் அமைப்பின் தொழிற்நுட்பக் குழுவின் நிபுணர்கள், 2015ம் ஆண்டு மைத்திரிபால சிறிசேனவின் பதவியேற்ற காலத்தில் இருந்து அவர் முன்னெடுத்த நடவடிக்கைகள் ஆராய்ந்து அவரை சிறந்த ஜனாதிபதியாக அறிவித்துள்ளனர்.

ஜனாதிபதி பதவியேற்ற நாளில் இருந்து முன்னெடுக்கப்பட்டு வரும் துரிதமான அபிவிருத்தி நடவடிக்கைகளை பலர் வரவேற்றுள்ளனர்.

நாடு மற்றும் ஜனாதிபதி தொடர்பான அரசியல், பொருளாதார மற்றும் சமூக குறியீடுகளுக்கு அமைய இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

உலக தலைவர்கள் அறிக்கையை ஏற்றுக்கொண்டுள்ளனர். எவ்வாறாயினும் இலங்கையின் எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தின் அனைத்து நகர்வுகளையும் விமர்சித்து வருகின்றன.

தன்னை உலகில் சிறந்த ஜனாதிபதியாக தெரிவு செய்தமை குறித்து கருத்து வெளியிட்டுள்ள ஜனாதிபதி, இது போன்ற ஒரு மதிப்பு மிக்க அங்கீகாரம் கிடைத்தமை குறித்து பெருமையடைகின்றேன்.

எனது அரசாங்கத்தின் கடின உழைப்பு மற்றும் வெளிப்படைத்தன்மை ஊடாக இந்த சாதனை பெறப்பட்டதாக நான் நம்புகிறேன்.

தமது ஜனாதிபதியாக எனது கடமைகளை செய்ய இலங்கை மக்கள் சிறந்த சூழலை உருவாக்கி கொடுத்ததாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.