சங்கிலிய மன்னின் ஆட்சி வரலாற்று தொல்பெருள் சின்னம் தொடர்பில் ஆய்வுகள் -பேராசிரியர் புஸ்பரட்ணம்-

539 0

img_5402யாழ்.மாவட்டத்தில் சங்கிலிய மன்னனின் ஆட்சி நடைபெற்ற பகுதிகளுக்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளது என்று யாழ்.பல்கலைக்கழக வரலாற்றுத்துறை பேராசிரியர் புஸ்பரட்ணம் தெரிவித்துள்ளார்.
இவ்வாய்வுகள் ஊடாக புதிய மரவுரிமை தொடர்பான அடையாளங்கள் நிறுவப்படும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
மன்னார் கட்டுக்கரையில் மேற்கௌ;ளப்பட்ட அகழ்வாய்வு தொடர்பாக முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்:-
மேலும் எதிர்வரும் வருடம் பூநகரியில் உள்ள இரண்டு சிவ ஆலயங்களை புணரமைப்புச் செய்ய உள்ளோம். நகுலேஸ்வரத்தின் மண்டபத்தினை புணரமைப்புச் செய்ய உள்ளோம்.
சங்கிலிய மன்னன் அரசாட்சி நடத்திய இடமாக சொல்லப்படும் இடங்களையம் அகழ்வாய்வு செய்ய இருக்கின்றோம். மத்திய கலாசார நிதியத்தோடு பல்கலைக்கழக தொல்லியல் பிரிவினரும் இணைந்து இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளவிருக்கின்றோம்.
இவ்வாறான ஆய்வுகள் மூலம் பல்வேறு விதமான மரவுரிமை அடையாளங்கள் கொண்டுவரப்படும். இதன் ஊடாக அந்த பிரதேச மக்களுக்கான நன்மைகளை அந்த மரவுரிமைகள் பெற்றுக் கொடுப்பதுடன், ஒட்டுமொத்த இலங்கைக்கும் அது பெருமைதேடி கொடுக்கும் என்பது எனது நம்பிக்கை.