நாட்டின் சட்டம் மற்றும் உரிமைகள் அனைவருக்கும் சமமானதாக இருக்க வேண்டுமென தேசிய தொழிற் சங்க கூட்டமைப்பின் தலைவர் சமன் ரத்னப் பிரிய தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடுகையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்…
அரசாங்க வைத்திய அதிகாரிகளுக்கு மட்டும் விசேட வரப்பிரசாதங்கள் வழங்கப்பட்டால் சிவில் அமைப்புக்களுடன் இணைந்து பாரிய போராட்டம் முன்னெடுக்கப்படும்.
கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் அரசாங்க வைத்திய அதிகாரிகள் நாட்டின் சட்ட திட்டங்களுக்கு புறம்பாக விசேட வரப்பிரசாதங்களை அனுபவித்தனர்.
வைத்திய அதிகாரிகளின் பிள்ளைகளுக்கு பிரபல பாடசாலைகளில் அனுமதி கிடைக்கப் பெற்றது.
வைத்தியர் ஒருவர் குற்றமிழைத்து கைது செய்ய வேண்டுமாயின் சட்டமா அதிபரின் பரிந்துரை தேவைப்பட்டதாகவும், ராஜபக்ச ஆட்சியில் இவ்வாறு வைத்தியர்களுக்கு விசேட வரப்பிரசாதங்கள் சலுகைகள் வழங்கப்பட்டன.
அரசியல் நட்பு காரணமாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்க உறுப்பினர்கள் நாட்டின் சட்ட திட்டங்களுக்கு புறம்பான வகையில் செயற்பட்டனர்.
வரலாற்றில் இழைக்கப்பட்ட தவறுகள் திருத்திக்கொள்ளப்பட வேண்டும். இந்த தரப்பிற்கு மட்டும் விசேட வரப்பிரசாதங்கள் வழங்கப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது.
அனைத்து மக்களுக்கும் சம உரிமைகள் சமமான சலுகைகள் வழங்கப்பட வேண்டுமென அரசாங்கத்திடம் கோருகின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.