சிக்குன்கூனியா மற்றும் ஸீகா தொடர்பாக சிறீலங்காவுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து கட்டுநாயக்கா விமானநிலையம் மற்றும் கொழும்புத் துறைமுகம் ஆகிய பிரதேசங்களில் இந்நோய்களைத் தடுப்பதற்கான தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
சிக்குன்கூனியா இந்திய தலைநகர் புதுடில்லியில் வேகமாக பரவிவருவதுடன், ஸீகா வைரஸ் சிங்கப்பூரில் அதிகமாக பரவி வருவதாகவும் தற்போது தாய்லாந்திலும் அதன் தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த இரண்டு நோய்களும் நுளம்பினாலேயே பரவி வருகின்றது.
அண்மையில் இந்தியா சென்று திரும்பி வந்த சிலாபத்தைச் சேர்ந்த இரண்டு யாத்திரீகர்கள் கடுமையான காச்சலின் பின்னர் உயிரிழந்தனர். இதனையடுத்தே குறித்த சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.