கண்டி தலதா மாளிகையில் இடம்பெறவுள்ள எசல பெரஹராவையொட்டி, விசேட ரயில் சேவையை முன்னெடுக்க, ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்கமைய,நாளை 21 தொடக்கம் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை, புறக்கோட்டையிலிருந்து- கண்டி வரை இவ் விசேட ரயில் சேவை இடம்பெறவுள்ளது.
குறித்த நாட்களில் காலை 9.50 மணியளவில் புறக்கோட்டையிலிருந்து கண்டிக்கு ரயிலொன்று சேவையில் ஈடுபடவுள்ளதுடன், இந்த ரயில் பிற்பகல் 1.15 அளவில் கண்டியை சென்றடையவுள்ளது.
அத்துடன் கண்டியிலிருந்து, மு.ப 11.45 க்கு கொழும்பு கோட்டை மற்றும் நாவலப்பிட்டி வரை, 2 ரயில்களை சேவையில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக, ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், எதிர்வரும் 26 ஆம் திகதி கோட்டையிலிருந்து காலை 7 மணிக்கு கண்டிக்கும், கண்டியிலிருந்து இரவு 7 மணிக்கு கோட்டைக்குமாக, 2 ரயில்கள் சேவையில் ஈடுபடுமென, ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.