ஹட்டன் ஸ்ரதன் தோட்டத்தில் மண்சரிவு அபாயம் காரணமாக 23 குடும்பங்கள் இடம்பெயர்வு

310 0

குடும்பங்களைச் சேர்ந்த 61 பேர் பாதுகாப்பாக ஹட்டன புரூட்ஹில் தமிழ் மகா வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மத்திய மலைநாட்டில் சீரற்ற காலநிலையினை தொடர்ந்து இத்தோட்டத்தில் குடியிருப்புகளுக்கு மேல் உள்ள மலை பகுதியில் பாரிய வெடிப்புக்கள் ஏற்பட்டு மண்சரிவு அபாயம் தோன்றியதனையடுத்தே இந்த குடும்பங்கள் இடம் பெயர்ந்துள்ளனர்.

குறித்த குடும்பங்களின் அங்கத்தவர்களுக்கு தேவையான சமைத்த உணவுகளை வழங்கவும், அத்தியவசிய பொருட்களை பெற்றுக்கொடுக்கவும், அம்பகமுவ செயலாளரின் பணிப்புரையின் கீழ் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கிராம சேவகர் தெரிவித்தார்.

Leave a comment