முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷவிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் (சி.ஐ.டி) இன்று (வாக்குமூலம் பெற்றுக்கொள்ளவுள்ளனர்.
வாக்குமூலமளிப்பதற்கு, தான் தயாரென மஹிந்த ராஜபக்ஷ, சி.ஐ.டியினரிடம் தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் உதவிப் பொலிஸ் அதிகாரியின் தலைமையிலான பொலிஸ் குழுவொன்று, கொழும்பு-07, விஜயராம மாவத்தையிலுள்ள, ராஜபக்ஷவின் வாசஸ்தலத்துக்குச் சென்று, வாக்குமூலம் பெற்றுக்கொள்ளவுள்ளது.
ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு, தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் வாக்குமூலமொன்றைப் பெற்றுக்கொள்வதற்கு, தினமொன்றை ஒதுக்கித்தருமாறு, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர், நான்கு தடவைகள், தொலைபேசி அழைப்பை எடுத்திருந்தனர். எனினும், தினமொன்றை வழங்காமையை அடுத்தே, குற்றப்புலனாய்வுப் பிரிவினர், கடந்த 12ஆம் திகதியன்று மஹிந்த ராஜபக்ஷவுக்கு திகதியொன்றை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது