பொகவந்தலாவ கெர்கஸ்வோல்ட் பகுதியிலுள்ள பாரிய மின் வினியோக தாங்கியொன்றின் மீது மரமொன்று முறிந்து வீழ்ந்தமையினால் பிரதேசத்திற்கான மின் வினியோகம் முற்றாக தடைப்பட்டுள்ளது .
ஹட்டனிலிருந்து பொகவந்தலாவ வரையிலான பகுதிகளுக்கு மின் வினியோகிக்கும் குறித்த மின் தாங்கியானது இன்று பிற்பகல் வீசிய பலத்த காற்றினால் மரமொன்று முறிந்து வீழ்ந்ததில் முற்றாக சேதமைந்துள்ளது.
பொகவந்தலாவ நோர்வூட் டிக்கோயா பகுதிகளுக்கு 33000. மெகா வோட்ஸ் மின்சாரம் குறித்த மின் தாங்கியினூடாக வினியோகம் செய்யப்படுவதாக ஹட்டன் மின்சாரசபையினர் தெரிவித்த்ததுடன் மாற்றுவழியில் பிரதேசத்திற்கு மின் வினியோகத்தை வழங்க நடவடிக்கை எடுத்து வருவாதாக ஹட்டன் மின்சார சபையினர் தெரிவித்தனர்