தண்ணிமுறிப்பு குளத்தில் உயிரின வளங்களினை முற்றாக அழிக்கக்கூடிய தடைசெய்யப்பட்ட பெருமளவிலான தங்கூசி வலைகள் மீட்கப்பட்டு மீனவ சங்கங்களின் உதவியுடன் அழிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத வலைகளினை பயன்படுத்தி நன்னீர் மீன்பிடியில் ஈடுபடுபவர்களை கட்டுப்படுத்தும் நோக்குடன் தேசிய நீர் உயிரின வளர்ப்பு அதிகாரசபையின் பிராந்திய அலுவலர்கள் தண்ணிமுறிப்புக்குளத்தின் மீனவ சங்கங்கள் முத்தையன்கட்டு மீனவசங்கம் இணைந்து தண்ணிமுறிப்பு குளத்தில் நேற்றுமுன்தினம் நடாத்திய தேடுதலின் ஈடுபட்டனர்.இதன்போது நீர்வாழ் உயிரின வளங்களினை முற்றாக அழிக்கக்கூடிய தடைசெய்யப்பட்ட சுமார் 300 கிலோவிற்கும் அதிகமான ரூபா 15 இலட்சம் பெறுமதியான தங்கூசி வலைகள் மீட்கப்பட்டு மீனவ சங்கங்களின் உதவியுடன் அழிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட சிலரனால் தொடர்ச்சியாக குளங்களில் செய்யப்படும் இவ்வாறான செயற்பாடுகளினால் நன்னீர் மீன்பிடியினை மட்டும் வாழ்வாதராமக நம்பியிருக்கும் எத்தனையோ குடும்பங்கள் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டு முற்றுமுழுதாக மீன்பிடி தொழினை விட்டு வெளியேறக்கூடிய நிலை ஏற்ப்பட்டுள்ளது.நீர் வாழ் உயிரினங்கள் மற்றும் மக்களின் நிலைபேறா வாழ்வாதரத்தை பாதுகாக்கும் நோக்குடன் தேசியநீர் உயிரின வளர்ப்பு அதிகாரசபையின் பிராந்திய காரியாலம் தொடர்ந்து செயற்பட்டு வருகின்றமையால் இவ்வாறான சட்டவிரோத நன்னீர் மீன்பிடி நடவடிக்கைகள் குறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.