அரச முஸ்லிம் பாடசாலைகளின் இரண்டாம் தவணை விடுமுறை நாளை (17) வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதன்படி, நாளை (17) வெள்ளிக்கிழமை முதல் எதிர்வரும் 10 நாட்களுக்கு இந்த விடுமுறை வழங்கப்படவுள்ளது.
மூன்றாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் ஆகஸ்ட் 27 ஆம் திகதி ஆரம்பமாகும் எனவும் அமைச்சு மேலும் கூறியுள்ளது.
அரச முஸ்லிம் பாடசாலைகளுக்கான விடுமுறை எதிர்வரும் திங்கட்கிழமை என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், முஸ்லிம்களின் ஹஜ் பெருநாள் எதிர்வரும் 22 ஆம் திகதி அமையப் பெற்றுள்ளதனால், இத்தினம் எதிர்வரும் 17 ஆம் திகதிக்கு மாற்றப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.