புதிய அபராத முறையை நீக்கப் போவதில்லை- நிமல்

227 0

வீதி விபத்துக்களை கட்டுப்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட புதிய அபராத முறையை எவ்வித காரணங்களுக்காகவும் மீளப் பெறுவதில்லை என்று போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கூறியுள்ளார்.

இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.

அபராத முறையை நீக்க கோருவது பஸ் உரிமையாளர்கள் அல்ல என்றும் பஸ்களில் பணியாற்றும் நபர்களின் தேவைக்கு ஏற்ப ஒருபோதும் இதுபோன்ற தீர்மானங்களை எடுப்பதில்லை என்றும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கூறியுள்ளார்.

போக்குவரத்தில் உண்மையான ஒழுங்கு முறை இருக்க வேண்டும் என்றும், எதிர்காலத்தில் தேவையென்றால் அதனை வேறு சட்டமூலத்தின் ஊடாக திருத்தம் செய்ய முடியும் என்றாலும் தற்போதைய அரசாங்கம் அதுபோன்ற தீர்மானம் எடுக்காது என்றும் அவர் கூறினார்.

எவ்வாறாயினும் இன்றைய பஸ்களின் வேலை நிறுத்தம் மொத்தமாக பார்க்கும் போது தோல்வி என்றாலும் சில பிரதேசங்களில் மக்கள் பாதிப்படைந்திருப்பதாக அறியக்கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

Leave a comment