கூட்டு எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சுயாதீனமாக செயற்பட்டாலும் அவர்களுக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி கிடைக்காது என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
களுத்துறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கூட்டு எதிர்க்கட்சியில் உள்ளவர்கள், மக்களுக்கு அடிக்கடி மெல்லுவதற்காக இனிப்பு பண்டங்கள் வழங்குவதாகவும் தற்போது புதிதாக எதிர்க்கட்சி தலைவர் என்ற இனிப்பு பண்டத்தை மெல்லுவதற்காக வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.