அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ போட்டியிட முடியுமென்றால் எவ்வித வாதங்களும் இன்றி அவருக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக டிலான் பெரேரா கூறியுள்ளார்.
இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.
அதேநேரம் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஷவின் ஆசிர்வாதத்துடன் அந்த தேர்தலில் களமிறங்கினால் ஒத்துழைப்பு வழங்குவதாகவும் அவர் கூறியுள்ளார்.
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் சந்திரிக்கா போட்டியிட்டால் ஒத்துழைப்பு வழங்கப்படுமா என்று ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கே அவர் இவ்வாறு பதிலளித்தார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் மடியில் அர்ந்துகொண்டு போட்டியிட்டால் சந்திரிகாவுக்கு ஒத்துழைப்பு வழங்குவதில்லை என்று டிலான் பெரேரா இதன்போது கூறினார்.