வேலை நிறுத்தங்களுக்கு பின்னால் அரசியல் நிகழ்ச்சி நிரல் –அகில விராஜ்

234 0

மாணவர்களின் வாழ்க்கையை தீர்மானிக்கும் மைல்கல்லாகக் காணப்படும் உயர் தர பரீட்சை இடம்பெறும் காலப்பகுதியில் ஒரு சிலர் குழுக்கள் அரசியல் நிகழ்ச்சி நிரல்களை செயற்படுத்துவதன் மூலம் போதும்மக்களை சிரமத்துக்கு உட்படுத்துவதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

தனியார் பஸ் தொழிற்சங்கமொன்று நேற்று நல்லறிவு முதல் மேற்கொண்டுவரும் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அவர், இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு பின்னால் அரசியல் நோக்கமே காணப்படுவதாகவும், உயர் தர பரீட்சைக்கு முகங்கொடுக்கும் மாணவர்களை கருத்தில் கொண்டு இதற்கு ஆதரவு வழங்காமல் போக்குவரத்து சேவைகளை வழங்கிய அனைத்து தனியார் பஸ் உரிமையாளர்கள், சாரதிகள், மற்றும் பஸ் நடத்துனர்களுக்கு தாம் நன்றிகளை தெரிவிப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இவ்வாறான செயற்பாடுகளுக்கு இடமளிக்காமல் நாட்டின் நலனுக்காக செயற்படும் தொழிற்சங்கங்களின் சாதாரண கோரிக்கைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்க அரசாங்கம் தயாராகவுள்ளதாகவும் கல்வியமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a comment