பாராளுமன்ற பாதுகாப்பு அதிகரிக்கப்படும்-கயந்த

216 0

பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் அமைந்திருக்கும் பாதுகாப்பு கட்டிடத்தை புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி புனர்நிர்மாணம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி பாராளுமன்ற தொகுதியின் முன்பக்க நுழைவாயில் பகுதியில் அமைந்துள்ள ஜயந்திபுர பாதுகாப்பு கட்டிடம் மற்றும் பின்பக்க நுழைவாயில் பகுதியில் உள்ள பின்னியர பாதுகாப்பு கட்டிடம் ஆகியவற்றை பாதுகாப்பு மற்றும் மேற்பார்வை நடவடிக்கைகளுக்கு தேவையான நவீன வசதிகளுடன் மேம்படுத்தவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட குறித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment