லஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு விசாரணை அதிகாரிகளாக 200 பட்டதாரிகளை இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக அதன் ஆணையாளர் நெவில் குருகே தெரிவித்துள்ளார்.
இதற்கான நேர்முகப் பரீட்சை அடுத்த மாதம் இடம்பெறும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இதற்கு மேலதிகமாக லஞ்சம் மற்றும் ஊழலைத் தடுக்க ஒருங்கிணைந்த அதிகாரிகள் அதிகாரிகளாக 50 பேரை இணைத்துக் கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
லஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் 400 பேர் இருக்க வேண்டியுள்ளதாகவும், இருப்பினும், தற்பொழுது 200 பேரே சேவையில் உள்ளதாகவும் ஆணையாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.