கூட்டு எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படுவார்களாக இருந்தால், அதற்கு அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சிக்கும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும் இடையில் பல்வேறு வேற்றுமைகள் இருப்பினும் நாட்டின் எதிர்காலத்திற்காக ஒன்றாக இணைந்து செயற்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் சுயாதீனமாக வேண்டும் என்றால் ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினரும் தனித்தனியாக கடிதம் மூலம் அறிவித்தால் அது தொடர்பில் பரிசீலணை செய்வதாக அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.