மஹிந்தவுக்கு CID அழைப்பு

239 0

த நேசன் பத்திரிகையின் ஊடகவியலாளர் கீத் நோயார் கடத்தப்பட்டு துன்புறுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொவதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை எதிர்வரும் 17ம் திகதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

குற்றப்புலனாய்வு பிரிவின் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்னவின் கையொப்பத்துடன் கூடிய குறித்த அழைப்பாணை முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு கடந்த 12ம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் இதற்கு முன்னர் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோரிடமும் குற்றப்புலனாய்வு பிரிவினரால் வாக்குமூலங்கள் பெறப்பட்டிருந்தன.

குறித்த கடத்தல் சம்பவத்திற்கு ஆதரவளித்தமை தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட இலங்கை இராணுவப்படையின் முன்னாள் புலனாய்வு அத்தியட்சகர் மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர மற்றும் இராணுவ புலனாய்வு படையின் மேஜர் பிரபாத் ஸ்ரீ புலத்வத்த உள்ளிட்ட 6 புலனாய்வு அதிகாரிகள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 2008ம் ஆண்டு மே மாதம் 22ம் திகதி இரவு ஊடகவியலாளர் கீத் நோயார் கடத்தப்பட்டு துன்புறுத்தப்பட்டு விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment