இராணுவ ஆயுத களஞ்சியசாலை வெடிப்பில் சேதமடைந்த வானங்களுக்கு இழப்பீடு

306 0

சாலாவ இராணுவ முகாமில் ஆயுத களஞ்சியசாலை வெடித்ததினால் சேதமடைந்த வானங்களுககு இழப்பீடு வழங்கப்படவுள்ளது.

இதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்திருப்பதாக காணி அபிவிருத்தி பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான கயந்த கருணாதிலக்க தெரிவித்தார்.

கொஸ்கம சாலாவ இராணுவ முகாமில் ஆயுத களஞ்சியசாலை வெடித்ததினால் தனிப்பட்டவகையிலும் அசையும் சொத்துக்கள் பலவற்றுக்கும் பாதிப்புகள் ஏற்பட்டன. அத்தோடு அவ்வாறு பாதிக்கப்பட்ட வீடுகள். வர்த்தக நிலையங்கள் மற்றும் ஏனைய பல்வேறு சொத்துக்களுக்காக செலுத்தப்படவேண்டிய இழப்பீட்டை செலுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டிருந்தது.

இருப்பினும் இதில் பாதிக்கப்பட்ட அதாவது உரிய இழப்பீடு கிடைக்கப்பெறாத வானங்களுக்கு நஷ்ட ஈட்டை வழங்குவதற்காக நீர்ப்பாசன மற்றும் நீரியல் வள மற்றும் இடர்முகாமைத்துவ அமைச்சர் துமிந்த திசாநாயக்க சழமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment