வேலை வேண்டுமா? – தமிழக அரசு அதிகாரிப் பணி

270 0

தமிழகத்தில் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளுக்கான தேர்வு-II (Combined Civil Services Examination–II) குறித்த அறிவிக்கையைத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டிருக்கிறது. இந்தத் தேர்வில் வெற்றிபெறுவதன் மூலம் சார்பதிவாளர், வருவாய் ஆய்வாளர், நகராட்சி ஆணையர் உள்ளிட்ட பல பதவிகளைப் பெறுவதற்கான வாய்ப்பு பட்டதாரிகளுக்கு உண்டு. மொத்தம் 1,199 காலிப் பணியிடங்கள் நிரப்பட உள்ளன. உரிய தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் செப்டம்பர் 9 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

கட்டணம்: நிரந்தரப் பதிவுக் கட்டணம்: ரூ. 150

முதல்நிலைத் தேர்வுக் கட்டணம்: ரூ. 100

முதன்மைத் தேர்வுக் கட்டணம்: ரூ. 150

எஸ்.சி., எஸ்.டி., மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற கைம்பெண்கள் ஆகியோர் தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. கட்டணத்தை ஆன்லைன் வழியே கட்ட வேண்டும்.

வயது: பதவிகளுக்குத் தக்க வயதுத் தகுதி மாறுபடுகிறது. குறைந்தபட்ச வயது 18, அதிகபட்ச வயது 40 வரையும் உள்ளது. எஸ்.சி., எஸ்.சி., (அருந்ததியர்) எஸ்.டி., எம்.பி.சி., சீர் மரபினர், பி.சி., பி.சி. (முஸ்லிம்), ஆதரவற்ற கைம்பெண்கள் ஆகிய பிரிவினருக்கு உச்சபட்ச வயது வரம்பு எதுவுமில்லை. மாற்றுத்திறனாளிகளுக்கு உச்சபட்ச வயது வரம்பில் பத்து ஆண்டுகள் சலுகை வழங்கப்படுகிறது.

கல்வி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். பதவிகளைப் பொறுத்து பட்டம் பெற்றிருக்க வேண்டிய பாடம் வேறுபடுகிறது. கல்வி குறித்த முழு விவரமறிய அறிவிக்கையைப் பாருங்கள்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை: தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: உரிய தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் www.tnpsc.gov.in/www.tnpscexams.net/www.tnpscexams.in ஆகிய இணையதளங்களின் வழியே ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க இறுதி நாள்: 09.09.2018.

முதல்நிலைத் தேர்வு நாள்: 11.11.2018

கூடுதல் விவரங்களுக்கு: http://www.tnpsc.gov.in/

Leave a comment