இனவாதத் தீ இதுதானோ !
ஆடிக் கலவரமாய்
ஆனியில் நூலகமாய்
ஆண்டாண்டு தோறும்
அவர்களுக்கு அழிக்கவும்
எரிக்கவும் மட்டும்தானே தெரியும்
ஜே.ஆர் இற்கு ஒரு முகமும்
ரணிலுக்கு இன்னோர் முகமும்
எப்போதும் இருந்ததில்லை
சந்திரிக்காவுக்கும், மகிந்தவுக்கும்
ஏன் மைத்திரிக்குக்கூட
வேறு வேறு முகங்களல்ல
அவர்களுக்கு அழிக்கவும்
எரிக்கவும் மட்டும்தானே தெரியும்
சமாதானப் புறா என்றும்
நல்லாட்சி நாயகர்கள் என்றும்
இவர்களுக்கு அடிக்கும் வெள்ளைகளை நம்பி
சம்பந்தர் வேணுமென்றால்
அம்மணமாய் திரியட்டும்
எங்களுக்குத் தெரியும்
அவர்களுக்கு அழிக்கவும்
எரிக்கவும் மட்டும்தானே தெரியும்
கலியுகன்