வெளிவிவகார அமைச்சு நாட்டு மக்களை ஏமாற்றுகிறது – குணதாச

265 0

மக்களை ஏமாற்றும் அறிக்கைகளையே வெளிவிவகார அமைச்சு வெளியிட்டு வருகின்றது என்று தேசிய ஒருங்கமைப்பு ஒன்றியத்தின் தலைவர் குணதாச அமரசேகர குற்றம் சாட்டியுள்ளார்.

இன்று நாவலையில் அமைந்துள்ள அந்த அமைப்பின் தலைமைக்காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

முன்னாள் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் பொறுப்பு இலங்கைக்கே உரியது. ஜெனிவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை இந்த விவகாரத்தை கையாளவில்லை என்று வெளிவிவகார அமைச்சு கூறியிருப்பது நாட்டு மக்களை ஏமாற்றும் செயல்.

போரின் இறுதிக்கட்டத்தில் இலங்கையில் பணியாற்றிய கொழும்பு பிரிடிஸ் தூதரக, பாதுகாப்பு துறை அதிகாரியினால் அனுப்பபட்ட தகவல்களை உள்ளடக்கியதாக பிரிட்டனின் பிரபுக்கள் சபையில் நாஸ்பி பிரபுவினால் அழிக்கப்பட்ட அறிக்கையையும் ஐ.நா சபை மனித உரிமைகள் பேரவையிலிருந்து அமெரிக்கா விலகிய இன்றய சந்தர்ப்பத்தையும் இலங்கை அரசாங்கம் சாதகமான முறையில் பயன்படுத்த வேண்டும்.

அத்துடன் ஐ.நா. செயலாளர் நாயகத்தின் நிபுணர் குழு அறிக்கையை ஆராய ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர் முன்வைத்தார்.

Leave a comment