சுற்றுலா விருது வழங்கும் விழாவில் 72 துறைகளில் விருதுகள்

276 0

இலங்கையின் சுற்றுலாத் துறையை ஆகக்கூடுதலான அந்நிய செலாவணியை ஈட்டித் தரும் துறையாக மாற்றுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜோண் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

சுற்றுலாப் பயணிகளுக்கு உகந்த சூழலைக் கட்டியெழுப்புவது அவசியம் எனவும் இதற்காக விசேட வேலைத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளதெனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று கொழும்பில் இடம்பெற்ற 2018ம் ஆண்டுக்கான சுற்றுலா விருது வழங்கும் விழா பற்றிய செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சுற்றுலா விருது வழங்கும் விழா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெறும்.

இதில் 72 துறைகள் சார்ந்து விருதுகள் வழங்கப்படவுள்ளன. விண்ணப்பங்கள் எதிர்வரும் 19ஆம் திகதி தொடக்கம் அடுத்த மாதம் 19ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும்.

இதற்கான விண்ணப்பங்களை சுற்றுலா துறைசார்ந்த இணையத் தளத்தில் இருந்து தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.

Leave a comment