‘ஆறிப்போன காயங்களின் வலி’ நூல் வெளியீடு

586 0

DSC_00561பெண் போராளிகளின் பம்பைமடு தடுப்பு முகாம் வாழ்வு தொடர்பான ஒரு வரலாற்றுப்பதிவுகளைக் கொண்ட நூல் இன்று (25) சனிக்கிழமை காலை மன்னார் அடம்பன் மத்திய மகா வித்தியாலயத்தில் வெளியீடு செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் போராளி வெற்றிச் செல்வி எழுதிய ஏழாவது நூலான பெண் போராளிகளின் பம்பைமடு தடுப்பு முகாம் வாழ்வு தொடர்பான ஒரு வரலாற்றுப்பதிவுகளைக் கொண்ட ‘ஆறிப்போன காயங்களின் வலி’ எனும் நூல் வெளியீடு செய்யப்பட்டது.

ஆசிரியை தனலெட்சுமி கிருஸ்துராஜன் தலைமையில் இடம் பெற்ற குறித்த நூல் வெளியீட்டு விழாவிற்கு பிரதம விருந்தினராக வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன்,சிறப்பு விருந்தினராக திருமதி தனேஸ்குமார் சத்தியபாமா,கௌரவ விருந்தினராக சட்டத்தரணி ஆறுமுகம் ரகுபதி ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

நூலின் வெளியீட்டுரையினை தீபச்செல்வன் ஆற்றினார். மதிப்பீட்டுரையினை  தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியைச் சேர்ந்த  கோகிலவாணியும் ஏற்புரையினை நூலாசிரியர் வெற்றிச் செல்வியும்  நிகழ்த்தினார்கள் .

Leave a comment