சவுதி அரேபியாவின் தம்மாம் நகரில் இரு போலீசாரை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சவுதி அரேபியாவின் தம்மாம் நகரில் இரு போலீசாரை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சவுதி அரேபியாவில் சன்னி இனத்தை சேர்ந்த முஸ்லிம்கள் பெரும்பான்மையாகவும், ஷியா இனத்தை சேர்ந்தவர்கள் சிறுபான்மை பிரிவினவராகவும் வாழ்ந்து வருகின்றனர். ஷியா பிரிவினர் நாட்டின் கிழக்கு மாகாணத்தில் அதிகமாக வசித்து வருகின்றனர்.
இவர்களில் சிலர் நாட்டை ஆளும் சன்னி இனத்தலைமையிலான அரசின்மீது அதிருப்தியில் உள்ளனர். தங்களது எதிர்ப்பை தெரிவிக்க அவ்வப்போது தீவிரவாத தாக்குதல்களையும் நடத்தி வருகின்றனர்.
அவ்வகையில், கிழக்கு மாகாணத்தில் உள்ள முக்கிய பகுதியான தம்மாம் நகரில் நேற்று ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மீது சில மர்ம நபர்கள் துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இதில் இரு போலீசார் கொல்லப்பட்டதாக சவுதி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.