அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் மத்திய மற்றும் தென் ஆசியாவுக்கான உதவி இராஜாங்க செயலாளர் நிஷா பிஷ்வாலுக்கும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பு வெற்றியளித்திருப்பதாக நிஷா பிஷ்வால், தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
இலங்கையின் மறுசீரமைப்பு செயற்பாடுகள் குறித்து இச்சந்திப்பில் பேசப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் பிரதியமைச்சர் கருணாரட்ன பரணவிதாரண உள்ளிட்ட சிலரையும் நிஷா பிஷ்வால் சந்தித்துள்ளார்.