அரசாங்கம் அதிகாரப் பகிர்வு குறித்து ஆராய்கிறது – யாழில் பிரதமர் தெரிவிப்பு

367 0

ranil-3மாகாணங்கள், நகரசபைகள் மற்றும் பிரதேச சபைகளுக்கு, மத்தியில் இருந்து அதிகாரங்கள் பகிரப்படும் வகையிலான ஒரு அதிகார பகிர்வு குறித்து கலந்துரையாடி வருவதுடன் காயப்பட்டுள்ள மக்களுடைய மனங்களை ஆற்றுப்படுத்துவதற்கான முயற்சிகளையும் அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இதற்கமைய தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும், காணாமல்போனவர்களுக்கு என்ன நடந்தது? என்ற உண்மை நிலையை கண்டறிவதற்காகவே காணாமல் போனவர்கள் அலுவலகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், இதில் பழிவாங்கும் எண்ணம் இல்லை என்றும் அவர் கூறினார்.

யாழ்மாவட்டச் செயலகத்தில் 4 மாடிகளைக் கொண்ட புதிய நிர்வாகக் கட்டடத் தொகுதித் திறப்பு விழாவும், நினைவுக்கல் திரை நீக்கமும் இன்று நடைபெற்றது.

இந்நிகழ்வின்போது, புதிய கட்டடத் தொகுதியைத் திறந்து வைத்து உரையாற்றுகையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறன.
காணாமல் போனவர்கள் தொடர்பான உன்மை நிலையை கண்டறிவதற்காக காணாமல் போனவர்கள் அலுவலகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

காணாமல் போனவர்கள் இருக்கி றார்களா? இல்லையா? என காண்பதற்கே இந்த அலுவலகம். இதற்கு ஒரு கால எல்லை இல்லை. என்பதுடன் பழிவாங்கும் எண்ணமும் இல்லை. இது மக்களுடைய மனங்களை ஆற்றுப்படுத்துவதற்கான முயற்சியே ஆகும் எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.