க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் இஸ்லாமிய மாணவிகளுக்கு பர்தாவிற்கு பதிலாக முந்தானை அணிந்து வருமாறு பரீட்சை நிலையப் பொறுப்பதிகாரிகள் கட்டாயப்படுத்திய சம்பவங்கள் தொடர்பாக உரிய அமைச்சின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம்.அமீன் தெரிவித்தார்.
நேற்று ஆரம்பமாகிய க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய முஸ்லிம் மாணவிகளுக்கு சில பரீட்சை நிலையங்களில் பர்தாவுடன் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளன.
மேலும் பர்தாவிற்கு பதிலாக முந்தானை அணிந்து கொண்டு பரீட்சை நிலையத்திற்குள் பிரவேசிக்குமாறு நிலையப் பொறுப்பதிகாரிகளால் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் மாணவர்களின் பெற்றோரால் ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்ஸிலிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
முறைப்பாடு தொடர்பாக கல்வியமைச்சர் அகில விராஜின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
முஸ்லிம் மாணவிகளின் ஆடை உரிமை மறுப்பு சம்பவங்கள் நடைபெற்றால் அவற்றை உடனடியாக தமது கவனத்திற்கு கொண்டுவரும்படி என்.எம். அமீன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.