கருணையில்லாத, மூளை குழம்பிய தலைவர்களின் ஆட்சி- சி.பீ. ரத்னாயக்க

236 0

ஜனாதிபதியின் பெயரிலுள்ள கருணை என்பது பொய்யானது எனவும், அவரிடம் பொறாமை, பழி வாங்கும் எண்ணம் என்பனவே காணப்படுவதாகவும், பிரதமரின் மூளை குழப்பமடைந்துள்ளதால், பிழையான தீர்மானங்களை எடுத்து வருவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் சி.பீ.ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

கொத்மலை, பூண்டுலோயாவில் நேற்று (04) நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் ரணிலின் மூளை குழப்பமடைந்துள்ளது. இதனாலேயே நாட்டுக்குப் பொருத்தமில்லாத தீர்மானங்களை அவர் முன்னெடுத்து வருகின்றார்.  அவர்கள் எல்லாவகையான காட்டிக் கொடுப்புகளையும் தற்போது அரங்கேற்றி வருகின்றார்.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை விற்றுள்ளது. மத்தள விமான நிலையத்தை விற்க நடவடிக்கை முன்னெடுத்துள்ளது. தற்போது ஒலுவில் துறைமுகத்தை விற்பதற்கு அரசாங்கம் முயற்சித்து வருவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

100 நீதிமன்றங்களை அமைத்து சிறைகளில் அடைத்தாலும் கூட்டு எதிர்க் கட்சி முன்னெடுக்கும் இந்த போராட்டத்தை நிறுத்த போவதில்லை. தற்போது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஊதியத்தை அதிகரிக்க வேண்டிய எந்தவொரு தேவையும் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

தற்போதைய ஜனாதிபதியின் பெயரில் மைத்திரி என்ற இரக்க குணம் காணப்பட்டாலும் அவரிடம் அவ்வகையான குணம் இல்லை. மாறாக பொறாமை, பழி வாங்கும் எண்ணம் போன்றவையே மேலோங்கி காணப்படுகின்றது எனவும் சி.பீ. ரத்னாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a comment