காங்கோவில் எபோலா வைரஸ் நோய் தாக்கத்தினால் 33 பேர் பலி!

241 0

தென் ஆப்பிக்க நாடான காங்கோவில் மீண்டும் ஏற்பட்ட எபோலா வைரஸ் நோய் தாக்கத்தினால் 33 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

தென் ஆப்பிரிக்க நாடுகளில் 1976-ம் ஆண்டுகளில் இருந்து கொடூரமான நோயாக கருதப்பட்டது எபோலா என்னும் உயிர்கொல்லி நோய். இந்த வைரசின் தாக்கத்தினால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். தென் ஆப்பிரிக்காவின் வடமேற்கு நாடான காங்கோவில் எபோலா நோய் பரவி வருவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில், கடந்த வாரம் காங்கோவின் வடக்கு பகுதிகளில் 22 பேர் எபோலா வைரஸ் தாக்கி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது கிழக்கு காங்கோவில் எபோலா நோய் பாதிப்பு காரணமாக 33 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 879 பேருக்கு எபோலா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உலக சுகாதார நிறுவனம் அனுப்பியுள்ள எபோலா வைரஸ் தடுப்பு மருந்துகள் மூலம் அதனை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளது.
காங்கோவில் பல்வேறு கிளர்ச்சியாளர்கள் குழுக்கள் இயங்கி வரும் நிலையில் அவர்களது கட்டுப்பாட்டில் உள்ள எபோலா பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தேவையான மருந்து உள்ளிட்ட உதவிப்பொருட்களை எடுத்து செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
எபோலா கிருமியினால் இந்நோய் உண்டாக்கப்படுகிறது. இந்தக் கிருமியானது தொற்று ஏற்பட்டுள்ள ஒரு விலங்கின் ரத்தம் அல்லது உடல் திரவங்களால் பரப்படுகிறது. பழம் தின்னும் வௌவால்கள் கிருமியைக் பரப்புவதாக கூறப்படுகிறது.

Leave a comment